கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறு! மகனை கொடூரமாக கொன்ற தாய்!

கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த தன் 3 வயது குழந்தையை தாயொருவர் கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அமைந்துள்ளது. பெருந்துறைக்கு அருகாமையில் உள்ள ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் 4 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புவனேஸ்வரிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  கள்ளக்காதலனின் பெயர் சோமசுந்தரம் என்பதாகும்.இதனையறிந்த கார்த்திகேயன் புவனேஸ்வரியை கண்டித்துள்ளார். மேலும் இருவரும் பிரித்துள்ளனர்.

வேளச்சேரியில் புவனேஸ்வரி,கள்ளக்காதலன் சோமசுந்தரம் மற்றும் மகன் கிஷோர் ஒன்றாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

நேற்று மாலை கிஷோர் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக பெருந்துறையில் உள்ள தன் மாமியாருக்கு புவனேஸ்வரி தகவல் அனுப்பியுள்ளார். மேலும் இறுதிச்சடங்கிற்காக தன் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதலால் புவனேஸ்வரி மற்றும் மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.