கள்ளக்காதல் ருசி! பெற்ற மகளுக்கு விஷ பிஸ்கெட் கொடுத்த தாய்! கோவை பயங்கரம்!

கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தன் 3 வயது குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டு முட்புதரில் வீசி கொலை செய்த தாயார் ஒருவரின் செயல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு அருகில் வெள்ளியங்காடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ரூபினி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியனருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் மிகுதியாக தொடங்கின. இருவரும் பிரிந்து வாழும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே ரூபினிக்கு ஒரு ராங் நம்பர் மூலம் ஒரு கால் வந்தது. அதை தொடக்கத்தில் துண்டித்தாலும் பின்னர் அதே நபர் இவரிடம் மிகவும் நட்புறவாடி உள்ளார். அவரின் பெயர் ராம். 

நெருக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு முறை தனிமையில் வெளியிடங்களில் சந்தித்துள்ளனர். அவனுடைய கனிவான பேச்சினை நம்பிய ரூபினி தன்னைப்பற்றி விலாவரியாக கூறியுள்ளார். மேலும் ராமின் பேச்சை நம்பி சரவணம்பட்டிக்கு தன் 3 வயது குழந்தையுடன் ரூபினி சென்றார். அங்கு இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவன்று இருவரின் உடலுறவை கெடுக்கும் வகையில் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் ராம் மிகவும் வெறுப்படைந்துள்ளான். பின்னர் மறுநாளன்று குழந்தையை தன் பாட்டி வீட்டில் விட்டுவருவதாக கூறி ரூபினியை ஒரு பேக்கரியில் அமர வைத்து சென்றுள்ளான். பின்னர் அருகே இருந்த முட்புதர் ஒன்றில் குழந்தையை வீசியுள்ளான்.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். பின்னர் பேக்கரியில் இருந்த ரூபினியிடம் கேட்ட போது அவள் அழுதுகொண்டே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

பின்னர் ரூபினியிடம் துருவி துருவி விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது தங்கள் கள்ளக்காதலுக்கும் பின்னர் உடலுறவுக்கும் அந்த குழந்தை மிகவும் இடையூறாக இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இதனால் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன என்றும் கூறினார். இதனால் வெறுப்படைந்து குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொடூரமாக கொன்று பின்னர் முட்புதரில் தள்ளிவீசி நாடகமாடியதாக ரூபினி ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ரூபினியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமை போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து தேடி வருகின்றனர்.