கண்ணை மறைத்த காமம்..! தகாத உறவுக்காக மகனை பலி கொடுத்த கொடூரத் தாய்..! கோவை அதிர்ச்சி!

கோவையில் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க தடையாக இருந்த 6 வயது மகனை தாயே பிரம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரை சேர்ந்தவர் அருண் (வயது 35) . இவரது மனைவி பெயர் திவ்யா ( வயது 30). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வயதில் அபிஷேக் என்ற மகனும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

அருண் அந்த பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீப காலமாகவே கணவன்-மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் திவ்யா தன்னுடைய கணவரிடம் சண்டையிட்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கூட்டி சென்று கோவை கோவில்மேட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

கணவரை பிரிந்து வாழ்ந்த திவ்யா, அருகே இருந்த தனியார் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்படி செல்லும் பொழுது கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றிவந்த ராஜதுரை (வயது 30 ) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவ்விருவருக்கும் இடையில் உள்ள பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து ராஜதுரை திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து உல்லாசமாக இருப்பதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால் ராஜதுரை, திவ்யாவின் வீட்டிலேயே தங்கி இருந்திருக்கிறார். இதனை அடுத்து ராஜதுரை மற்றும் திவ்யா ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க திவ்யாவின் மகன் அபிஷேக் தடையாக இருந்திருக்கிறான. இதனால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் திவ்யாவும் அவரது கள்ளக்காதலன் ராஜ் துறையும் இணைந்து பெறாமல் சரமாரியாக சிறுவனை அடித்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு பலத்த காயங்களுடன் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் எங்கு மாட்டிக் கொள்வோமோ என்று இருவரும் இணைந்து மருந்து கடையில் மருந்து வாங்கி சிறுவனுக்கு போட்டு விட்டுள்ளனர். ஆனால் சிறுவனின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.

பின்னர் சிறுவனை ஆம்புலன்ஸில் வந்த ஊழியர்கள் பரிசோதனை செய்துள்ளனர் அவனது உடலில் முழுக்க முழுக்க காயங்கள் இருந்ததை அவர்கள் கவனித்து உள்ளனர். பின்னர் அவர்கள் பரிசோதித்த போது சிறுவன் அபிஷேக் உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். 

 இதைப்பற்றி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் திவ்யா தனது மகன் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மர்மமான முறையில் சிறுவன் இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீசார் தங்களுடைய கிடுக்குப்பிடி விசாரணையை துவங்கிய போது திவ்யாவும் ராஜதுரையும் நடந்த உண்மைகள் அனைத்தையும் கூறியிருக்கின்றனர். பின்னர் இருவரையும் கைது செய்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.