பால்கனியில் ஒன்றரை வயது மகன்! செல்போனில் பிசியான 30 வயது மும்தாஜ்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

பால்கனியிலிருந்து 1.5 வயது குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் தாயார் செல்போனில் உறைந்திருந்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் சையது அபுதாஹிர் என்பவர் வசித்து  வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மும்தாஜ். மும்தாஜின் வயது 30. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளைய மகனின் பெயர் இர்ஃபான். இர்ஃபானின் வயது 1.5.

இவர்கள் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 2-வது மாடியில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மும்தாஜ் இர்ஃபானுக்கு பால்கனியில் நின்று சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மும்தாஜுக்கு  ஒரு செல்போன் அழைப்பு கேட்டுள்ளது.

செல்போனில் மும்தாஜ் வீட்டிற்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இர்ஃபான் பால்கனியில் இருப்பதை அவர் மறந்துவிட்டார். அப்போது திடீரென்று இர்ஃபான் பால்கனியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இர்ஃபானின் அலறல் சத்தத்தை கேட்ட, மும்தாஜ் பதறி அடித்துக்கொண்டு சென்றுள்ளார். பால்கனியில் இருந்து இருப்பான் கீழே தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் இர்ஃபானை மீட்டெடுத்து அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இர்ஃபானை பரிசோதித்த  மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தாயின் கவனக்குறைவால் 1.5 வயது குழந்தை பால்கனியிலிருந்து விருந்து இழந்துள்ள சம்பவமானது வண்ணாரப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.