வேறொரு இளைஞனுடன் நெருக்கமாக இருந்த தாய்! அறைக்குள் வைத்து பூட்டிய மகள்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

கள்ளக்காதலனுடன் இருந்த தாயை அறையின் வெளியில் பூட்டிய சம்பவமானது பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பாளையங்கோட்டை பகுதியில் மேலப்பாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய வயது 68. இத்தம்பதியினருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் உள்ளார்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பழவிளை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆசிரியையின் தம்பியின் நண்பர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் நேற்று ஆசிரியையின் வீட்டிலேயே அவரும் கள்ளக்காதலும் ஒரே அறையில் இருந்துள்ளனர். இதனை கண்ட ஆசிரியையின் மகள் அதிர்ச்சி அடைந்து அறையை வெளியில் பூட்டியுள்ளார். தன் உறவினர்களுக்கு மாணவி தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆசிரியையின் உறவினர்கள் தகாத உறவில் ஈடுபட்டு இருந்த இளைஞனுக்கு தர்மஅடி கொடுத்தனர். மேலப்பாளையம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பிடித்து கொடுத்தனர். காவல் நிலையத்திற்கு விரைந்து வந்த ஆசிரியை அவருடன்தான் இணைந்து வாழ்வேன் என்று அடம்பிடித்துள்ளார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கூறினார்.

பின்னர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் காவல்நிலையத்தில் கூறினார்‌. அதாவது "என் கணவருக்கும் என் தாய்க்கும் இடையே பல நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் பிரச்சனை பெரிதாகாமல் இருப்பதற்கு என்னை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. அதனால் 10 ஆண்டுகளாக நான் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளேன்"என்று கூறினார்.

யாரும் வாலிபர் மீது புகார் அளிக்காததால் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. உயிருக்கு பயந்த ஆசிரியையை நெல்லை மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவமானது பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.