6 வருடத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த மருமகள்! இரும்பு ராடால் அடித்து சிதைத்த மாமியார்! அதிர வைக்கும் காரணம்!

மகளையும் பேரக்குழந்தையையும் பிரித்துவிடுவார் என்று பயந்த மாமியார் மருமகளை கொலை செய்த சம்பவமானது மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் வசாய் எனும் நகர் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மாணிக்ப்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆணந்தி மனே. இவருடைய வயது 48. இவருடைய மூத்த மகனின் பெயர் ரோஹன் மனே. இவருடைய மனைவியின் பெயர் ரியா மனே. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தனர். தம்பதியினருக்கு ஒரு மகனுள்ளான்.

இதனிடையே, 1-ஆம் தேதியன்று இருவரும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர் வழக்கமான மாமியார் மருமகள் சண்டை போன்று இவர்கள் வீட்டிலும் அரங்கேறியுள்ளது. நேற்று காலை வழக்கம் போல மாமியார் மருமகளிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து ஆனந்தி ரியாவை தலையில் அடித்துள்ளார்.

இதனால் ரியா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக ஆனந்தி அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று மருமகளை கொலை செய்த குற்றத்திற்காக சரணடைந்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், "எனக்கும் என் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன. என் மருமகளுக்கு என் மகனையும் என் பெயரை குழந்தையையும் என்னிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருந்து வந்தது. ஆதலால் அவ்வாறு நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் ஆவேசப்பட்டு என் மருமகளை கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனந்தி இந்த சம்பவத்திற்கு முன்னர் சில தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.