3 குழந்தைகளுக்கு விஷமளித்த தாயொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 மகள்களை விஷம் வைத்து கொலை செய்த தாய்..! பிறகு அவர் எடுத்த கண் கலங்க வைக்கும் முடிவு! பதற வைக்கும் காரணம்!

நீலகிரியில் கூடலூர் பெரியார் நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அங்குள்ள எஸ்டேட்டில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 36. இவருடைய மனைவியின் பெயர் வனிதா. இத்தம்பதியினருக்கு அபிக்ஷா(13), அனுஷ்ரி(10), அக்ஷதா (8) என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முருகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வனிதாவிடம் தகராறு செய்வதையே முருகன் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் வைத்திருந்த கள்ளத்தொடர்பை நிறுத்தி கொள்ளுமாறும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முருகன் சம்மதிக்கவில்லை.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்த வனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய 3 குழந்தைகளையும் கணவர் பத்திரமாக பார்த்து கொள்ள மாட்டார் என்றும் யோசித்துள்ளார். அதனால் சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வனிதா இன்று காலை உயிரிழந்தார். 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனிதா விஷம் குடிப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதாவது "எங்கள் 4 பேரின் இறப்பிற்கும் என் கணவரும் அவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணே காரணம்" என்று எழுதியிருந்தது.
இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.