பசியால் கதறித் துடித்த தோழியின் குழந்தை..! உடனடியாக தாய்ப் பால் புகட்டிய இளம் தாய்! ஆனால் பிறகு நேர்ந்த பரிதாபம்!

தோழியின் குழந்தைக்கு பாலூட்டியதால் இளம்பெண் நேர்ந்துள்ள அவமானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் வேலைக்கு செல்லும் பெண் ஒருவர் தன்னுடைய கைக்குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு, தன்னுடைய 10  வருட தோழியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். குழந்தைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்று கேட்ட போது தோழி அனைத்தும் ஒரு பையில் இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த தோழியும் ஒரு கைக்குழந்தைக்கு தாயாவார். இந்நிலையில் இரு குழந்தைகளையும் மிகவும் அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார். சில மணி நேரம் கழித்து தன் தோழியின் குழந்தை பசியால் அழ தொடங்கியுள்ளது. தோழி கொடுத்து விட்டு சென்ற பையில் ஆராய்ந்தபோது அதில் எந்தவித பால் பவுடரும் இல்லை. செய்வதறியாது திகைத்த பெண் அந்தக் குழந்தையையும் தன் குழந்தை போல் பாவித்து தாய்ப்பால் கொடுத்துள்ளார். குழந்தை பசியால் மாலை நேரம் வரை விளையாடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் மாலை நேரத்தில் தேடி வந்த உடன் நிகழ்ந்தவற்றை எல்லாம் அந்த பெண் கூறியுள்ளார். தாய்ப்பால் கொடுத்ததாக கூறியவுடன் தோழியின் முகம் மாற தொடங்கியது. உடனடியாக ஆவேசத்தில் தன் தோழியை விட்டுவிட்டு அங்கிருந்து தன் கைக்குழந்தையை எடுத்து கொண்டு அந்த பெண் புறப்பட்டார்.

வீட்டிற்கு சென்றவுடன் சமூக வலைதளங்களில் தன்னுடைய தோழியை பிளாக் செய்தார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தன் தோழியை பற்றி புகாரளித்துள்ளார்.

நல்லெண்ணத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக தன்னுடைய தோழி இவ்வளவு கோபப்பட்டுள்ளது அந்தப்பெண்ணை மனதளவில் பாதித்துள்ளது. இந்த செய்தியானது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.