சிங்கத்தின் வாயில் பிள்ளை! வெறி கொண்ட வேங்கையான தாய்! போராடி மீட்ட அற்புத தருணம்!

தன் குட்டிகளை சிங்கத்திடமிருந்து காப்பதற்காக தாய்வழி குதிரை சிங்கத்துடன் போராடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், சிங்கமொன்று வரிக்குதிரை குட்டிகளை துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத வரிக்குதிரைகள் தடுமாறுகின்றன. ஒரே ஒரு வரி குதிரை சிங்கத்திடம் சிக்கி கொள்கிறது.

தன் குட்டிகளில் ஒன்று சிங்கத்திடம் சிக்கி கொண்டது கண்ட தாய் வரிக்குதிரை சிங்கத்திடம் சண்டை போடுகின்றது. வாயில் தன் குட்டியை கவ்வியிருக்கும் சிங்கத்தை வயிற்றில் முட்டி தன் குட்டியை தாய் வரிக்குதிரை காப்பாற்றுகின்றது.

தாய் வரிக்குதிரையின் போராட்டத்தை கண்டு அச்சம் அடைந்த சிங்கமானது காட்டிற்குள் ஓடி விடுகின்றது. பின்னர் அனைத்து குட்டி வரிக்குதிரைகளுடன் தாய்வரிக்குதிரை மகிழ்ச்சியாக செல்கின்றது.

தொழில்நுட்ப சாதனங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், அன்பு பாசம் முதலியவை குறைந்து வருகின்றது. சில துயர சம்பவங்களில் பெற்ற தாயே குழந்தைகளை அடித்து கொலை செய்வது போன்ற செய்திகள் வெளியாகின்றன. ஆனால் ஐந்தறிவுள்ள மிருகங்களிடையே இவ்வளவு பாசமும் அன்பும் வெளிப்படுவது மனிதர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.