ஏண்டீ..! இந்த வயசுல உனக்கு ஆம்பள கேட்குதா? பெற்ற மகளுக்கு தாயால் ஏற்பட்ட விபரீதம்!

காதலருடன் வெளியேற முடிவு செய்த இளம்பெண்ணை தாயார் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் வகேலா என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 40. இவருடைய மகளின் பெயர் நிர்மலா அசோக் வகேலா. இவருடைய வயது 23. நிர்மலா வேறொரு இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். 

ஆனால் அவருடைய தாயாருக்கு இந்த காதலில் உடன்பாடு இல்லை. இதுகுறித்து பலமுறை தன்னுடைய மகளிடம் வெளிப்படையாகவே வகேலா கூறியுள்ளார். ஆனாலும் நிர்மலா தன்னுடைய காதலில் மிகவும் அழுத்தமாக இருந்துள்ளார். இதனால் அவ்வப்போது தாய் மற்றும் மகளிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

நிச்சயம் தன்னுடைய தாயாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இயலாது என்பதை உணர்ந்த நிர்மலா, வீட்டை விட்டு வெளியேற முடிவு எடுத்துள்ளார். ஆனால் இதுபற்றி அறிந்த வகேலா தன்னுடைய மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மகள் தொடர்ந்து அடம்பிடித்து வந்ததால் ஆத்திரமான வகேலா தன்னுடைய துப்பட்டாவால் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் குடும்ப மானம் போய்விடும் என்பதற்காக வகேலா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மகளை கொலை செய்தவுடன் அப்பகுதி காவல் நிலையத்திற்கு தாமாகவே சென்று வகேலா சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் மாநிலம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.