மகளுடன் தாய் ஒரு க்யூட் செல்ஃபி! பிறகு இருவரும் சேர்ந்து எடுத்த அதிர வைக்கும் முடிவு!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தாயுடன் மகள் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மைசூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு மஞ்சுளா என்ற 38 வயது பெண்மணியும், அவருடைய மகளான சௌமியா என்ற 19 வயது இளம்பெண்ணும் வசித்து வருகின்றனர்.

நேற்று இருவரும் கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். நெடுநேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடிய பிறகும் இருவரையும் கண்டுபிடிக்க இயலாத விரக்தியில் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இருவரையும் தேடுவதற்கான பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கபிலா ஆற்றில் 2 பெண்களின் உடல்கள் மிதந்து கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல்கள் வந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலங்களை மீட்டு எடுத்தனர். பின்னர் மஞ்சுளாவின் உறவினர்களை அழைத்து அடையாளம் காணும்படி கூறியுள்ளனர். அப்போது இறந்துபோனது மஞ்சுளாவும், சௌமியாவும் தான் என்று உறவினர்கள் உறுதி செய்தனர்.

அதன் பின்னர் அவர்களுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர்களின் உறவினர்களிடம் தீர விசாரித்து வருகின்றனர். இறப்பதற்கு முன்னர் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.