கல்லூரி மாணவர்களுக்கு வீட்டிலேயே கஞ்சா பார்ட்டி! தாய் - மகன் நடத்திய போதை விருந்து! சென்னை திகுதிகு!

வீட்டில் வைப்பு கஞ்சா பார்ட்டி நடத்திய தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நெற்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பிற புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தன. தகவலை உறுதி செய்துகொள்ளும் வகையில் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

ஆய்வுகள் மேற்கொண்டதில் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்து கொண்டனர். மேலும் பெயர் தெரியாத நபர் ஒருவர் நெற்குன்றத்தில் உள்ள அன்னம்மாள் நகரில் கஞ்சாவாடை அதிகளவில் வீசப்படுவதாக தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக தனிப்படை அன்னம்மாள் நகரில் முழுநேர ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஒரு வீட்டில் கஞ்சாசெடிகளை வளர்த்து வரும் செய்தியினை உறுதிப்படுத்தினர். அந்த வீட்டில் ராஜேஷ்வரி என்ற பெண்ணும், அவருடைய மகனுமான பாலமுருகனும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை காவல்துறையினர் அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கிலோ அளவில் கஞ்சா பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தாய் மற்றும் மகனை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பாலமுருகன் தன்னுடைய நண்பர்களை வரவழைத்து நூதன முறையில் கஞ்சா பார்ட்டி கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதற்காக அவர்களிடம் இருந்து 100 அல்லது 200 ரூபாய் வசூலித்தது தெரியவந்துள்ளது..

இந்த சம்பவமானது நெற்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.