பிரசவ வலி! அழகான ஆண் குழந்தை பெற்ற மெர்லின்! ஆம்புலன்சில் ரகசியமாக ஏற்றி சிஎஸ்ஐ ஹாஸ்பிடல் செய்த பயங்கரம்!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாய் மற்றும் சேய் உயிரிழந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள ஆற்றூரை சேர்ந்தவர்  விஜின். இவருடைய மனைவியின் பெயர் மெர்லின் திவ்யா. நிறைமாத கர்ப்பிணியாகயிருந்த மெர்லின் திவ்யாவை மார்த்தாண்டத்திலுள்ள சி.எஸ்.ஐ மிஷன் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் மெர்லின் திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் பிறந்த சில மணித்துளிகளிலேயே தாயையும் குழந்தையையும் ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர்.

உறவினர்கள் கேட்டதற்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக மருத்துவமனையில் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸை பின்தொடர்ந்ததில் குழித்துறை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

அரசு மருத்துவர்கள் பரிசோதித்து தாய் மற்றும் சேய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மெர்லினின் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனால் மர்லினின் உறவினர்கள் கடும் ஆவேசமடைந்தனர். அனைத்து உபகரணங்களும் இருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றியது ஏன் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதி காவல் நிலையத்தில் உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விஜின் மனைவி மற்றும் குழந்தையை இழந்த சோகத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குழித்துறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.