ஒரே ஒரு கொசுக் கடி..! மயங்கி சரிந்தார்! ஐசியுவில் அனுமதி! பதற வைக்கும் சம்பவம்!

கொசு கடித்ததால் மரணத்தின் வாயில் வரை சென்ற இளம்பெண் உயிருடன் இருப்பது பிரிட்டன் நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் எசெக்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு கிம் ராபின்சன் என்ற 25 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். வழக்கம்போல அவருடைய வீட்டில் துணி காய போட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு கொசு அவரை கடிதுள்ளது.

கொசு கடித்த இடத்தில் அவருக்கு அரிப்பு ஏற்பட்டதால் அதிகமாக சொரிந்தார். மறுநாள் காலையில் இவருடைய கால் வீங்கியிருந்தது. மேலும் அவருக்கு தலை சுற்றலும் அவ்வப்போது ஏற்பட்டது. இதனால் பயந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது கொசு கடித்ததால் பயங்கர கிருமி ஒன்று கிம்மின் கால் வழியே உடலுக்குள் புகுந்ததால் உடல் முழுவதும் வீங்கியது. இதனால் அவருடைய காலை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காலை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது அந்த கிருமியானது கிம்மின் உடல் முழுவதிலும் பரவியது. கிருமியின் வீரியத்தால் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு கிம்மின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் எண்ணியிருந்த போது மீண்டும் அவருடைய இதயம் துடிக்க தொடங்கியது.

பின்னர் நோய் தொற்று ஏற்பட்டு இந்த தசையை அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் 5 நாட்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே கோமாவில் இருந்தார். கோமாவில் இருந்து மீண்ட பிறகு மனிதனின் அடிப்படை நடவடிக்கைகளும் அவருக்கு மறந்து போயிருந்தது. இதனால் ஒவ்வொன்றையும் அவருக்கும் கற்பித்து வருகின்றனர்.

அவர் மீண்டும் எழுந்து நடப்பதற்கு சில அறுவை சிகிச்சைகள் தேவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது பிரிட்டனில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.