உள்ளாட்சித் தேர்தலுக்கு 2 லட்சம் வேட்புமனு தாக்கல்..! தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு இன்று பரிசீலனை..!

இந்த மாதம் இறுதியில் நடைபெறப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதற்காக இதுவரை இரண்டு லட்சம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இதுவரை இரண்டு லட்சம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்பதற்கான போட்டியாளர்களின் வேட்புமனுத்தாக்கல் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதியன்று துவங்கியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வரை சுமார் 1 லட்சத்தி 65 ஆயிரம் பேர் வரை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்றைய தினம் சுமார் 2 லட்சம் பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவ்வராக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை இன்று அதிகாரிகள் பரிசீலனை செய்ய உள்ளனர். பரிசீலனை செய்யும் பொழுது முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் ஆகியவை நிராகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் வரும் 19ஆம் தேதி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் மாலை அளவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.