தீ பற்றி எரியும் அமேசான் காடு! ஒட்டு மொத்த உலக மக்களையும் நிலை குலையச் செய்த ஆதிவாசி பெண்ணின் ஒரே ஒரு செயல்! வைரல் புகைப்படம்!

அழிந்து கொண்டிருக்கும் அமேசான் காட்டை காப்பதற்கு இறுதிவரை போராடுவோம் என்று பிரேசில் பழங்குடிமக்கள் உறுதிபூண்டுள்ளனர்.


பரந்துவிரிந்த அதிக சுற்றளவு பரப்பை கொண்டது அமேசான் காடு. 3 வாரங்களுக்கு முன்னர் அமேசான் காட்டில் தீயானது பரவத்தொடங்கியது. கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான சதுர அடிகள் வரை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தற்போதும் தீயை அணைப்பதற்கு பாதுகாப்பு படையினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அமேசான் காடுகளில் மூரா என்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அமேசான் காட்டை மீட்டெடுப்பதற்கு தங்களால் இயன்ற வரை போராடி வருகின்றனர். அதாவது தங்கள் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அமேசான் காட்டை காப்பதற்கு போராடுவோம் என்று உறுதிபூண்டுள்ளனர்.

பண்ணை வசதி உடையவர்களும் மரம் வெட்டுபவர்களும் தங்களின் சுயநலத்திற்காக இது போன்ற சமுதாய சீர்கேடு செயல்களில் ஈடுபடுகின்றனர். மூரா பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணொருவர் தன் குழந்தைக்கு மட்டுமின்றி பன்றி குட்டிக்கும் பாலூட்டும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை கண்ட அனைவரும் மூரா பழங்குடியின மக்களின் விசுவாசத்தை போற்றி புகழ்கின்றனர்.

அமேசான் காட்டை காப்பாற்றுவதற்காக பிரேசில் அரசாங்கம் அனைத்து வழிகளிலும் போராடி வருகிறது. பழங்குடியின பெண்ணின் செயலானது மனித இனத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.