அடகு கடையில் தனிமையில் இருந்த இளம் பெண்..! உள்ளே அரிவாளுடன் நுழைந்து அழகுராஜ் செய்த செயல்..! திருப்பூர் திகுதிகு!

திருப்பூரில் அட்டிகா லோன் கம்பெனியில் தனிமையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை அரிவாளை ‌ வைத்து மிரட்டி 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் அழகுராஜை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டத்தில் குமரன் சாலை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் அட்டிகா கோல்டு லோன் கம்பனி செயல்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் ஊரடங்கால் ஆள் நடமாட்டம் சற்று குறைவாக இந்த பகுதியில் காணப்படுகிறது. இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு அட்டிகா கோல்டு லோன் கம்பெனிக்குள் நுழைந்திருக்கிறார். 

பின்னர் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதனையடுத்து அந்த கிளையின் மேலாளர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்து இருக்கிறார். தகவலறிந்த போலீசார் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த வீடியோ பதிவில் பதிவாகி இருந்த நபர் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுராஜ் என்ற கொள்ளையன் தான் என்று போலீசார் கண்டறிந்தனர். 

இதனையடுத்து போலீசார் கடந்த இரு தினங்களாக அழகுராஜை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அழகுராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் . 14000 பணமும் 10 சவரன் நகையையும் மீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் இடம் வழங்கியுள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.