வீட்டில் தனிமையில் இருந்த 8 வயது சிறுமி! திடீரென கேட்ட குரல்! சிசிடிவியை பார்த்து அதிர்ந்த தாய்!

மகளின் அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஹேக் செய்து இளைஞரொருவர் உரையாடிய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவை சேர்ந்தவர் ஆஷ்லி லிமே. இவருக்கு 8 வயதில் ஒரு மகளுள்ளார். இரவு நேரத்தில் பணிக்கு செல்வதால் இவருடைய மகளை இவரால் சரியாக பார்த்து கொள்ள இயலவில்லை. 

இதனால் தன்னுடைய மகளின் படுக்கையறையில் பிரத்யேக கேமராவை பொருத்தியிருந்தார். இந்த கேமராவின் மூலம் மகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இயலும். அவ்வப்போது ஆஷ்லி தன்னுடைய மகளுடன் உரையாடவும் இயலும்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அந்த கேமிராவின் வழியாக பேசியுள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர் காட்சிகளை சோதித்து பார்த்ததில் மர்ம நபர் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். 

அதன்பின்னர், "நான் சான்டா லாஸ். நீ என்னுடன் தோழியாக இருக்க முடியுமா என்று அந்த மர்ம குரல் கேட்டுள்ளது. அதற்கு சிறுமி நீ யாரென்று திருப்பி கேட்டுள்ளார். உடனடியாக அந்த மர்ம குரல் நான் சாண்டா லாஸ். உன்னுடைய உற்ற நண்பன்" என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன சிறுமியின் தாயார் அறையில் இருந்த கேமராவை நீக்கியுள்ளார். பொருத்தப்பட்ட 4 நாட்களிலேயே அதனுடைய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது என்று ஆஷ்லி அந்த நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த புகாரை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என்று பதில் அளித்துள்ளது.