அம்மா கொடுத்த கூல்டிரிங்ஸ்.! வாங்கி குடித்த வயது வந்த 2 மகள்கள்! மயங்கி சரிந்தவர்களுக்கு ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சொந்த வீட்டிலேயே திருடிய குற்றத்திற்காக 2 மகள்களையும் தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள சமுத்திரம் காந்திநகர் எனும் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் சாந்திமீனா. இத்தம்பதியினருக்கு லோகநாதன் என்ற 15 வயது மகனும், கோகிலா என்ற 13 வயது மகளும், லலிதா என்ற 11 வயது மகளும் என 3 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கனகராஜின் சகோதரர் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கனகராஜின் சகோதரர் வைத்திருக்கும் பணத்திலிருந்து அவ்வப்போது பணம் காணாமல் போயுள்ளது. கூட்டுக்குடும்பம் என்பதால் கனகராஜின் சகோதரர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தன்னுடைய 2 மகள்கள் தான் தன்னுடைய கணவரின் சகோதரர் பணத்தை திருடி வருவதாக சாந்திமீனாவுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் நேரிடும் என்பதற்காக, சாந்திமீனா மகள்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அவர்களுக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்து அதில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்த உடன் இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு அவர்களை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் இருவரின் உடல்நிலையும் மோசமானதால் உடனடியாக அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு லலிதாவுக்கும் கோகிலாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சாந்திமீனாவே காவல்துறையினரிடம் தன்னுடைய மகள்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.