அம்மா நான் செத்துடுவேனா? தாயை நிலைகுலைய வைத்த கொரோனா பாதித்த 5 வயது சிறுவன் கேட்ட கேள்வி! பிறகு?

பிரித்தானியா நாட்டை சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது தாயார் மிகவும் உருக்கமான கொரோனா குறித்து எச்சரிக்கை பதிவை சமூக வலை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.


கொரோனா வைரஸ் தன்னுடைய தாக்கத்தை மிக தீவிரமாக ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

லாரன் என்ற பெண் பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர். 30 வயதாகும் இவருக்கு ஐந்து வயதில் அல்ஃபி என்ற மகன் உள்ளார். ஆரோக்கியமாக இருந்து வந்த அல்ஃபி திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அப்போது அவருக்கு பரிசோதித்த பொழுது உடலில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அல்ஃபி மிக அதிகமான காய்ச்சல் உடனும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருவதும் பார்த்த லாரன் , தன் மகனை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை அறிந்து தனிமைப்படுத்த துவங்கினர். 

மருத்துவமனையில் யாருமே இல்லாமல் அனாதையாக கிடக்கும் தன் மகனை பார்க்கும் பொழுது தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என அந்தத் தாய் கண்ணீர் மல்க அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் மருத்துவமனையில் இருந்த அந்த சிறுவன் அல்பி தன் தாயாரை பார்த்து நான் இங்கே இறந்து விடு வேணா என்று மிகவும் அச்சத்தோடு கேட்டிருக்கிறான்.

இதனைப் கேட்ட சிறுவனின் தாயார் லாரன்ஸ் கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்ட அவர், அனைவரும் பரிதாபம் படுவதற்காக நான் இந்த பதிவை வெளியிட வில்லை. கொரோனா தொற்றிலிருந்து நாம் அனைவரும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

ஆகையால் நாம் அனைவரும் அரசு கூறும் நடவடிக்கைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவைதான் இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென உன் கூறி இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.