கணவன் இல்லை! 3 பெண் பிள்ளைகள்! தனிமையில் தவித்த மனைவி எடுத்த படுபாதக முடிவு! அதிர்ந்த தேனி!

வறுமையின் கொடுமையால்  தாயொருவர் தன் 2 மகள்களுடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் போடி எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.புரத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் லக்ஷ்மி. லக்ஷ்மியின் வயது 36. இத்தம்பதியினருக்கு அனுசுயா (19), ஐஸ்வர்யா (15), அட்சயா (10) என்று 3 மகள்கள் உள்ளனர்.

துரதிஷ்டவசமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பால்பாண்டி இறந்து போனார். குடும்பமானது வறுமையில் சிக்கி கொண்டது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது. கூலி வேலையில் சம்பாதிக்கும் பணம் சாப்பாட்டுக்கு மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது. இதனால் அவருடைய மகள்களை அவரால் படிக்க வைக்க இயலவில்லை. வறுமையிலிருந்து மீற‌ இயலாததால், பால்பாண்டி சென்ற இடத்திற்கே செல்வதென்று முடிவெடுத்தனர்.

லட்சுமி தன்னுடைய 3 மகள்களுக்கும் விஷத்தை கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்களுடைய சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே எதிர்பாராவிதமாக ஐஸ்வர்யா மற்றும் அனுஷ்யா உயிரிழந்தனர். லட்சுமி மற்றும் அக்ஷயாவுக்கு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.