தளபதி விஜயின் அடுத்த படம்! இயக்குனர் அறிவிப்பு! யார் தெரியுமா?

நடிகர் விஜயின் புதிய படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது, அட்லீ இயக்கத்தில், தளபதி 63 என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, தளபதி 63 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வ்ருகிறது. இந்நிலையில், விஜயின் புதிய படம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, விஜய் நடிக்கும் புதிய படத்தை, மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா, ஏற்கனவே விஜய் நடிப்பில் வேலாயுதம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ளார். 

மோகன் ராஜா, ஸ்கிரிப்ட் மற்றும் கதைத் தேர்வில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவர்தான், விஜயின் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல், தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் மோகன் ராஜா புகழின் உச்சத்துக்கு சென்றார்.

தனி ஒருவருக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன் எனும் ஹிட் கொடுத்தார். தற்போது மோகன் ராஜா விஜயுடன் இணைந்துள்ளார்.