மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது - வெளுத்துவாங்கும் ராகுல்காந்தி

நரேந்திரமோடியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.


 இப்போது கொரோனா தடுப்பு விவகாரங்களில் மோடி அரசு கோட்டைவிட்டதால், ரஷ்யாவை பின்னே தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இதுதான் மோடியின் சாதனை என்று கூறியிருக்கிறார். 

இந்தியாவில் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு தழுவிய பொது முடக்கம் மார்ச் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் கொரோனாவில் தாக்கம் அதிகரித்து விட்டது. ஊரடங்கை சரியான வழியில் பயன்படுத்தவில்லை இப்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது. தற்போது ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதனால் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதேபோல், மத்திய அரசின் எதிர்காலத் திட்ட கணிப்புகள் தோல்வி என்று கொரோனா வைரஸ் தொற்று, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல் போன்றவற்றை அமல்படுத்தியுள்ளார். ஆஹா, இதுதான் மோடியின் சூப்பர் சாதனை என்று ராகுல் ட்வீட்டரை காங்கிரஸ்காரர்கள் நாடுமுழுக்க பரப்பி வருகிறார்கள்.