மோடி - ராகுல்! அடுத்த பிரதமர் யார்? பிரபல ஜோதிடரின் ஷார்ப் கணிப்பு!

நமது முந்தைய இரண்டு பதிவுகளையும் படித்து, நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியின் ஜாதக ஆய்வுகளைப் பார்த்திருப்பீர்கள்.


எத்தனை தலைசிறந்த மனிதர் என்றாலும் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்படுவதற்குக் காரணம் அவரது ஜாதக அமைப்புத்தான். எப்போதும் ஒருவரால் வெற்றி நடை போட முடியாது, அதேபோல் எப்போதும் தோல்வி மட்டுமே கிடைக்கும் என்பதும் இல்லை. ஜாதக கிரக நிலை மாற்றம் எத்தனை புத்திசாலியையும் தலைகுப்புறத் தள்ளிவிடும் என்பதை வாழ்க்கையில் பார்த்திருப்போம்.

 

இப்போது  பிரதமர் பதவிக்கு நடக்கும் போட்டியில் இருவருக்கும் ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது மக்கள் செல்வாக்கும்  அரசை ஆளும் ஆற்றலும்  மோடியிடம் நிறைந்தே காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் மோடி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.


ஆனால், அவருக்கு ஜாதக நிலை அத்தனை சுத்தமாக இல்லை என்பதால் வெற்றி வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது. மைனாரிட்டி கவர்மெண்ட் என்ற அளவில் தலைமை ஏற்கலாமே தவிர, தனிப்பெரும் வெற்றிபெறும் ஆற்றல் இல்லை.

 

அதே நேரம் மோடிக்கு எதிராக நிற்கும் ராகுல் காந்திக்கு பொது மக்கள் செல்வாக்கும், நிர்வாக ஆற்றலும் மோடியை விட குறைவு என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இவரது ஜாதக அமைப்பு இப்போது நன்றாக இருக்கிறது ஜாதக அமைப்பு நன்றாக இருந்தாலும் உச்சத்தில் இல்லை, அதனால் இவர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குக் காரணமாக இருப்பார்.


ஆனால், பிரதமர் பதவியை  ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவில் கிரகங்கள் சாதகமாக இல்லை. மேலும் இவரை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தாலும் இவர் ஏற்றுக்கொள்ளும்  மனநிலையில் இல்லை. அப்படியே பிரதமர் பதவிக்கு வந்தாலும் சிறிய காலத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகி விடுவார். எனவே இவர் கை நாட்டும் நபர் பிரதமர் பதவியில் அமர்வார். இதுதான் இந்திய ஜோதிட ஆய்வு மையக் கணிப்பு

 

வெளியீடு :

இறையருள் ஜோதிடர்

சூரிய நாராயண மூர்த்தி

இந்திய ஜோதிட ஆய்வு மையம் 

செல் .. 9443923665

 whatsapps: 90809 07727