எல்லா துன்பங்களுக்கும் காரணம் மோடிதான். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.. போர்க்கோலம்.

இந்தியா இன்று எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் கார ணம் மத்திய பாஜக அரசு ஜனநாயகத் தூண்களான ஊடகம் மற்றும் நீதித் துறையை அரித்துத் தின்றுவிட்டது அற நெறிகள் அழிந்து மிருகத்தனம் கோலோச்சுகிறது என்று திரிணாமுல் காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.


நாடாளுமன்றத்தில் எப்போதும் உறுதி யான கருத்துக்களை எடுத்துரைக்கக்கூடிய மஹுவா. மத்திய பாஜக அரசாங்கத்தை, அதன் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்துவருகிறார். மஹுவா மொய்த்ரா தனது உரையில் கூறியதாவது,

‘இந்தியா இன்று எதிர்கொள்ளும் துன்பங்களுக்குக் காரணம் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தைக் கைவிட்டதால் மட்டும் அல்ல... ஜனநாயகத் தூண்களான ஊடகம் மற்றும் நீதித்துறையும் அதைக் கைவிட்டுவிட்டன. இந்த அரசு அந்த தூண்களை அரித்துத் தின்றுகொண்டு இருக்கிறது.

‘புனிதப் பசு‘வாகக் கருதப்படும் நீதித்துறை இனி எப்போதும் ‘புனிதமாக‘ இருக்க முடியாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எப்போது இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக அமர்ந்தாரோ, தன் மீதான குற்றச்சாட்டை தானே விசாரித்துக் கொண்டாரோ, அதில் குற்றமற்றவராகத் தன்னை அறிவித்துக்கொண்டாரோ, பணி ஓய்வுபெற்ற மூன்றே மாதங்களில் மாநி லங்களவை உறுப்பினராக நியமிக்கப் பட்டாரோ அப்போதே அதன் புனிதம் சிதைந்துவிட்டது.

இந்திய அரசமைப்பின் கொள்கை களைக்காக்கும் வாய்ப்பை வீணடித்த போதே இந்த நீதித்துறை தனது ‘புனிதத்தை' இழந்துவிட்டதுஎன்றார். மேலும் அவர், ``அரசாங்கத்தைக் கேள்வி கேட்டதற்காக, அரசு விவகாரங் களில் கருத்து தெரிவித்ததற்காக காவல் துறையின் துன்புறுத்தலை மக்கள் எதிர் கொள்கிறார்கள். கோழைகள் குறித்தும், தீரர்கள் குறித்தும் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நான் பேசுகிறேன்.

கோழைகள், அதிகாரத்தின் பொய்யான துணிச்சலுக்குப் பின்னால், வெறுப்பின் பின்னால், மதவெறியின் பின்னால் மறைந்துகொள்கிறார்கள். இதை அவர்கள் தைரியம் என்கிறார்கள். இதற்குப் பிறகு, அரசாங்கம் பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களை ஒரு குடிசைத் தொழிலாக மாற்றியிருக்கிறது. இதன் மிகப்பெரிய வெற்றி கோழைத்தனத்தைத் தைரியமாகக் காட்டுவதாகும்.

அரசு அடக்குமுறை அரசாக மாறிவிட்டது. சந்தேகத்துக்குரிய ஒரு புகாரின் கீழ் இந்த நாடாளுமன்றத்தின் முன் னோடிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டைச் சுமத்த முடிகிறது.

இந்த அரசாங்கம், அறநெறிகளைவிட மிருகத்தனத்தையே நம்புகிறது. வெளி யுறவுத்துறை 18 வயதான சூழலியல் செயற்பாட்டாளருக்கும், அமெரிக்க பாப் பாடகிக்கும் பதிலளிக்கப் பயன்படுத்தி இருக்கும் துணிச்சல், டில்லி எல்லையில் முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ ஏன் இல்லை?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 90 நாள்களாக விவசாயிகள் டில்லியின் எல்லையில் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய அரசு யாரையும் நியமிக்கவில்லை. அந்த வேளாண் சட்டங்களை இந்த அரசின் கூட்டணி கட்சிகள் கூட எதிர்த்திருக் கிறார்கள். ஆனால், அரசு அதை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இந்த அரசு அறநெறிகளைவிட மிருகத் தனத்தையே நம்புகிறது என்பதை இது உணர்த்துகிறது என்று கலங்கடித்துள்ளார்.