பன்னீரைக் கட்டிப்பிடித்த மோடி! ஓரமாக நிற்க வைக்கப்பட்ட எடப்பாடி! டெல்லி விசிட் சீக்ரெட்ஸ்!

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே, தாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பதில் பா.ஜ.க. மிகவும் உறுதியாகிவிட்டது.


அதனால் தோழமைக் கட்சிகள் அத்தனை பேருக்கும் அழைப்பு கொடுத்து, விருந்துக்கும் ஏற்பாடு செய்தது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்த சுண்டைக்காய் கட்சிகளும் கலந்துகொண்டு கெத்து காட்டின.

இந்த விருந்தளிப்பில் அத்தனை பேரையும் மிரட்டியது பன்னீர்தான். அவர் அவ்வப்போது அமித் ஷா, மோடி, நிதின் கட்கரி போன்ற பெரும் தலைகளிடம் கேஷ்வலாக உரையாடிக்கொண்டு இருந்தார். இதில் உச்சபட்ச காட்சிதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்.

ஆம், கடைசி நேரத்தில் பிரமதர் நரேந்திர மோடி விருந்து மண்டபத்துக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழகத்தின் பாணியில் அளுயர மாலை போடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு விருந்தினரையும் சந்தித்து உரையாடினார். அப்போதுதான் நடந்தது அந்த மேஜிக்.

ஆம், ஒவ்வொரு தலைவர்களையும் கை குலுக்கி பேச்சுவார்த்தை நடத்திய மோடி, பன்னீர் செல்வத்தைப் பார்த்தவுடன் குஷியாகி விட்டாராம். உடனே அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று தன்னையும் மோடி கட்டிப்பிடிப்பார் என்று எடப்பாடி காத்திருக்க, மற்ற தலைவர்களைப் போன்று எடப்பாடிக்கு கையை மட்டும் கொடுத்துவிட்டாராம்.

இதுதவிர, இந்த விருந்தளிப்பில் சம்பந்தமே இல்லாமல் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டது, அத்தனை தமிழக அரசியல்வாதிகளையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆனால், டெல்லியில் பெரிய டிக் அடித்துக் கிளம்பியிருக்கிறார் பன்னீர். ஆக, அடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் பன்னீருக்கு நல்ல யோகம்தான்.