35 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரை என்ன செய்யச் சொன்னாரோ அதையே செய்திருக்கிறார் மோடி! ஜெ. பேச்சு உள்ளே!

1984ல் எம்ஜிஆர் ஆர் தமிழக முதல்வர்.அப்போது ஜெயலலிதா அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி.1984 ஜூலை 26ம் தேதி காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெயலலிதா பார்லிமெண்ட் மேலவையில் ஆற்றிய உரையை கேட்டால் அசந்து விடுவார்கள்.


அதன் தொடர்ச்சிதான் இன்று மேலவையில் நவநீத கிருஷ்ணன் பேசியது. 1984 பிப்ரவரியில் ஒரு காஷ்மீர் தீவிரவாதி கொலைக் குற்றத்திற்காக திகார் ஜெயிலில் தூக்கிலிடப்படுகிறார்.இதற்கு காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் கண்டனமும் கடையடைப்பும் நடக்கின்றன.ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரதினம்.

அன்று காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியேற்றம் நடக்கிறது.மறுநாள் ஆகஸ்ட் 15 ஸ்ரீநகரில் ஃபரூக் அப்துல்லா கொடியேற்றுகிரார்,அங்கே குண்டு வீச்சு நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் விளையாட ஸ்ரீநகர் வருகிறது.மேற்கிந்திய தீவுகளுடனான அ ந்தப் போட்டியின் போது ஸ்ரீநகர் ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சு நடக்கிறது.

நாம் எங்கே விளையாடுகிறோம் இந்தியாவிலா இல்லை பாகிஸ்தானிலா என்று இந்திய வீரர்கள் கேட்கிறார்கள்.பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுப்பபடுகிறது. அவர்களால் அதற்கு மேல் பேசமுடியாது.அவர்கள் சாதாரண விளையாடு வீரர்கள்.

ஃபரூக் அப்துல்லாவின் தேசபக்தியின் மேல் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் , பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு நவீன ஆயுதங்கள் ஜம்மு காஷ்மீர் வழியாகத்தான் வருகின்றன என்பதை அவரால் மறுகஇருக்கிறார்ா..இந்திய அரசு இதையெல்லாம் தாண்டி ஏன் காஷ்மீருக்கு சிறப்பு

அந்தஸ்து தருகிறது? இந்தியாவின் மற்ற மாநிலங்களை போலவே காஷ்மீரில் நடத்தாது ஏன்!. என்று ஜெயலலிதா35 வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறார்.இதை படித்தவர்களுக்கு இன்று பாராளுமன்ற மேலவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது எந்த அதிர்ச்சியையும்.அளிக்காது .