அமெரிக்காவில் மோடிக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து டிரம்பே ஆடிப்போய்விட்டார் என்று பா.ஜ.க. உரக்கக் கூவிவருகிறது. இந்த நேரத்தில் மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான உறவுக்குக் காரணம் முஸ்லீம் எதிர்ப்பு என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
முஸ்லீம் எதிர்ப்பில்தான் மோடியும் டிரம்புக்கும் ஒன்று சேர்ந்தார்களாம்! அமெரிக்காவில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்தை ஏன் யாரும் காட்டவே இல்லை!
குஜராத் கலவரத்தை மனதில் கொண்டு மோடிக்கு விசா மறுத்த அமெரிக்கா, இன்று மோடியை தனது நண்பன் என்கிறது. அதோடு இந்திய பொருளாதாரத்தை சீர் செய்தவர் என்று டிரம்ப் புகழாரம் சூட்டுகிறார். உண்மை நிலை அப்படியா என்பது டிரம்புக்கும் தெரியும், மோடிக்கும் தெரியும்.
அதேபோன்று அமெரிக்காவில் மோடி,' ‘‘எல்லா இந்தியர்களும் அடுத்தமுறையும் டிரம்ப்பையே அதிபராக்குங்க'' என கோரிக்கை விடுக்கிறார். இதற்காகத்தான் 50ஆயிரம் இந்தியர்களை ஒன்று திரட்டியுள்ளார்கள். இப்படி மோடியும் டிரம்பும் ஒருவரையொருவர் புகழவும் தழுவவும் காரணம் என்ன?
காஷ்மீர் பிரச்சனைய நீ கண்டுக்காத... இங்க இருக்க முஸ்லீம் பூராப்பேரையும் நான் அழிச்சுடுறேன் என்பதுதான் மோடியின் கருத்து. அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லை பிரச்சனையை நான் டீல் பண்றப்போ, நான் முஸ்லீம்களை விடமாட்டேன் என்பது டிரம்பின் எண்ணம். பொதுவாகவே ரெண்டு பேரும் முஸ்லீம்களை பொது எதிரியா பார்க்குறாங்க. அதுக்குத்தான் இந்த கூட்டு, கட்டிப்பிடிப்பு எல்லாம் என்கிறார்கள்.
அதனால்தானோ என்னவோ, விழா அரங்கிற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துநின்று, காஷ்மீர் விவகாரத்திற்காக மோடிக்கு கருப்புக்கொடி காட்டியதை மக்கள் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு மறைத்துவிட்டன மீடியாக்கள்.