கர்ப்ப பை திருட்டு! பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்?

மாடல் அழகியை கொலை செய்து அவருடைய கர்ப்பப்பையை திருடப்பட்ட சம்பவமானது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் சோபியா. இவருடைய வயது 16. இவர் ரஷ்யாவில் வலம் வரும் மாடலிங் அழகிகளில் ஒருவர். தன்னுடைய விடுமுறை நாட்களை தன் குடும்பத்தினருடன் செலவழிப்பது அதற்காக துருக்கி நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்டனர். 

துருக்கி சென்ற சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கடுமையான குடல் அழர்ச்சியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதற்கு பெற்றோரிடம் அனுமதி பெற்றுள்ளனர். 8 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே இறந்து போன சோபியாவின் உடலை ரஷ்ய நாட்டில் பிரேத பரிசோதனை செய்த போது கர்ப்பப் பை உள்ளிட்ட சில முக்கிய உறுப்புகள் அவர் உடலில் காணாமல்போய் இருந்ததாக சோபியாவின் தந்தையிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சோபியாவின் தந்தை தன் மகளின் உடல் உறுப்புகளை திருடி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் எர்கடானுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சோபியாவின் இறப்பு அறிக்கையானது முழுவதுமாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.