முகேனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ..! பீதி கிளப்பும் மீரா மிதுனின் லேட்டஸ்ட் ஆடியோ ரிலீஸ்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது.


இந்த போட்டியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மாடல் அழகியான மீராமிதுன் ஒருவர். மீரா என்றாலே இவருக்கும் சேரனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது சேரனின் மீது அப்பட்டமான பழியை சுமத்தி அவரை அசிங்கப்படுத்த நினைத்தார் . அப்போது கமல்ஹாசன் குறும்படம் ஒன்றை வெளியிட்டு மீராவின் மீது இருந்த தவறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு வனிதாவை விட அதிக மக்களிடம் கோபத்தையும் எரிச்சலையும் சம்பாதித்தவர் மீரா தான். இதற்குப் பின்பு இவர் போட்டியாளர்கள் மூலம் எடிட் செய்யப்பட்டு மக்களால் வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

இந்நிலையில் மீராமிதுன் , பாத்திமா பாபு ,ரேஷ்மா , மோகன் வைத்தியா ஆகியோர் நேற்றையதினம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வரவழைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் நுழைந்துள்ள மீரா வெளியே ஒரு மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டி உள்ளார் என்று கூறப்படுகிறது . அதற்கு சான்றாக மீரா அவருடைய நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் ஆடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோ பதிவில் நானும் முகினும் பிக்பாஸ் வீட்டிற்குள் நெருக்கமாக மற்றும் ஒன்றாக இருக்கும் விதமாக உள்ள வீடியோ கிளிப்பிங் எடுத்து புதிய வீடியோவாக வெளியிடுங்கள். அதற்கு பின்னணி இசையாகவும் பாடல்களை இணைத்து வீடியோக்களை உருவாக்குங்கள் . இதை செய்து விட்டு அதனை சமூகவலைத்தளத்தில் பரவ விடுங்கள் . இந்த வேலையை சரியாக முடித்துக் கொடுத்தால் நான் உங்களிடம் பேசிய படி பணத்தை அக்கவுண்டுக்கு செலுத்தி விடுவேன் என்று கூறியிருக்கிறார். 

இந்த ஆடியோவை வைத்து பார்க்கும் பொழுது மீரா மிதுன் தற்போது சேரன் மீது பழி சுமத்தியது போல் முகினையும் பழிக்கு ஆளாக வேண்டும் என்ற முடிவோடு பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.