செல்ஃபோன் பறிப்பு! செயின் அறுப்பு! போலீசை தெறிக்கவிடும் இளம் பெண்!

ரயில் நிலையத்தில் பொதுமக்களிடம் செல்ஃபோன் திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


குர்லா அருகே உள்ள கோவண்டி பகுதியை சேர்ந்த ஆஃபரரின் ஷெய்க் (20 வயது), பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார். இந்நிலையில், இவர், குர்லா ரயில் நிலையம் அருகே, லோக்கல் ரயிலில் சென்றபோது, சக பயணி ஒருவரிடம் இருந்து செல்ஃபோனை திருடியுள்ளார். இதைப் பார்த்ததும், அந்த பெண் பயணி, தடுக்க முயற்சிக்கவே, அவரது நெஞ்சில் குத்திவிட்டு, ஷெய்க் தப்பிடியோடிவிட்டார். 

இதன்போது, ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், உடனடியாக, அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த திருட்டு செல்ஃபோனையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

வறுமை காரணமாக, இந்த தொழிலை செய்வதாகவும், தனது வயதான அம்மா மற்றும் தங்கைக்கு சோறு போட வேறு வழி தெரியவில்லை எனவும், ஷெய்க் போலீசில் கண்ணீர் மல்க கூறியது காண்போரை நெகிழச் செய்வதாக இருந்தது.