மாநில தேர்தல் ஆணைய செயலரை மாற்றியது ஏன்? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலராக இருந்த பழனிசாமி அவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.


தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணைய செயலராக இருந்த பழனிச்சாமி அவர்களை தற்போது டவுன் பஞ்சாயத்து இயக்குனராக பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

இவருக்கு பதிலாக விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த சுப்பிரமணியன் அவர்கள் மாநில தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்த சுப்பிரமணியம் அவர்களை பணியிட மாற்றம் செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். 

மேலும் சமீபத்தில் நடைபெற்ற விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் விசுவாசமாக வேலை செய்த மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன், திடீரென்று மாநில தேர்தல் ஆணைய செயலராக மாற்றப்பட்டிருப்பது ஏன் எனவும் , இந்த செயல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரை தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுத்தவா? அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் தள்ளிப்போடவா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.