எனக்கு அனு சித்தி முறை..! ஆனால் சித்தப்பா சரியில்லை..! அதான் இப்டி செஞ்சோம்..! தோசை மாவு விஷக் கொலையில் புதிய திருப்பம்..!

கணவனுக்கு தோசை மாவில்  தூக்கமாத்திரையை கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புழல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். 5 வருடங்களுக்கு முன்னர் விழுப்புரத்தில் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்த போது அனுஷ்யா என்ற பெண்ணின் மீது இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த கல்யாணம் மண்டபத்திலேயே இருவருடைய காதல் வாழ்க்கை தொடங்கியுள்ளது.

இருவரும் இருவீட்டார் இடமும் தெரிவிக்க, அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியது. இத்தம்பதியினருக்கு லோகேஷ் என்ற மகனுள்ளான்.

சுரேஷ்குமார் ஒரு கறிக்கடையை நடத்தி வந்துள்ளார். இதனால் அவர் தினமும் குடித்து வந்துள்ளார். தினமும் வீட்டிற்கு வந்து அனுஷ்காவிடம் தகராறில் ஈடுபடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எனது சகோதரியின் மகனின் பெயர் முரசொலி மாறன். அவனுக்கு நான் சித்தி. எனக்கு அவன் மகன் முறை.

எங்களுக்கு ஒரே வயது என்பதால் நாங்கள் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள். ஆனால் எங்கள் இருவரின் மீதும் அவருக்கு எப்பொழுதும் சந்தேகமிருந்து வந்துள்ளது. இதனால் அவர் எப்பொழுதும் மனைவியை நிம்மதியாக விடாமல் சந்தேகித்து கொண்டே இருந்துள்ளார்.

அனுஷ்யா  இந்த சம்பவங்களை முரசொலி மாறனிடம் கூறியுள்ளார். அதற்கு முரசொலிமாறன் சுரேஷ் குமாரை கொலை செய்துவிட்டால் இருவரும் நிம்மதியாக இருக்கலாமென்று அனுஷ்யாவிடம் கூறியுள்ளார். அதன்படி தூக்க மாத்திரைகளை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றி கொடுத்துள்ளார். தோசை சாப்பிட்டவுடன் சுரேஷ்குமார் நினைவிழந்துள்ளார்.

அப்போது முரசொலிமாறன் அழைத்து தன்னுடைய துப்பட்டாவையளித்து கழுத்தை நெரித்து கொலை செய்து விடுமாறு கூறியுள்ளார். சுரேஷ்குமாரின் கழுத்தில் தழும்பு ஏற்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்து அனுஷ்யாவையும், முரசொலி மாறனும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது புதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.