படுக்கை அறை சமாச்சாரங்கள்..! எல்லா‌ ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!

படுக்கை அறையில் ஆண்கள் பொதுவாக கிளர்ச்சி நிலையில் இருக்கும் பொழுது பலவித தவறுகளை செய்து தங்களுடைய வாழ்க்கைத்துணையின் வெறுப்பை பெறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது.


பொதுவாகவே உடலுறவில் அல்லது கலவியில் ஈடுபடுவதற்கு முன்பாக ஆண் பெண் இருவருமே ஒரு விதமான கிளர்ச்சி நிலையில் இருப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு ஆர்வமில்லை என்றாலும் அது முழுமையானதாக அமையாது. அதிலும் ஆண்கள் சிலர் படுக்கையறையில் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக செய்யும் சில தவறுகள் பெண்களை பெரிதும் பாதிக்கின்றன. அவ்வாறாக படுக்கையறையில் உறவில் ஆண்கள் பொதுவாக செய்யும் தவறுகளை பற்றி தற்போது காணலாம்.

உடலுறவில் ஈடுபடும் பொழுது ஆண் பெண் இருவருமே தங்களின் துணைக்கு முத்தமிட்டு சுவாரஸ்யமாக அதனைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதனை செய்ய தவறி விடுகின்றனர். இதனால் அவர்களின் உடல் உறவு சுவாரஸ்யம் அற்றதாக காணப்படுகிறது. ஆண் பெண் இருவருமே இதனை செய்வது அவசியம். ஒருவேளை உடலுறவில் ஈடுபடும் பொழுது ஆண் பெண் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டால் அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல் உடலுறவில் ஈடுபடும் போது ஆண் பெண் இருவருமே தங்களுடைய கட்டுப்பாட்டை இழப்பது சாதாரண ஒன்றுதான். ஆகையால் இருவருமே கட்டுப்பாட்டை இழந்து தங்களின் வாழ்க்கை துணையின் மீது தங்கள் உடல் எடை முழுவதையும் செலுத்துவர். இதனால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கலவியில் ஈடுபாடு இல்லாமல் காணப்படுவர். 

உடலுறவில் ஈடுபடும் பொழுது ஆண் பெண் இருவரும் உரையாடலில் ஈடுபட வேண்டும். உரையாடாமல் அமைதியாக ஈடுபடுவதால் சற்று சுவாரசியம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உரையாடிக்கொண்டே உங்களின் வாழ்க்கை துணையின் அங்கங்களை வர்ணிப்பது ரசனையான வார்த்தைகளால் பாராட்டுவது ஆகியவற்றை பெண்கள் அதிகமாக விரும்புவர். கலவியில் ஈடுபட பெண்கள் தயாராவதற்கு முன்பாகவே ஆண்கள் அவர்களிடம் ஆக்ரோஷமாக செயல்படுவதும் மிகப்பெரிய தவறாகும். இதன்மூலம் உங்கள் துணை பயப்படக் கூடும். பயத்தோடும் நடுக்கத்தோடும் ஈடுபடும் கலவி எதிர்பார்த்த அனுபவத்தை தராது. ஆகையால் உங்கள் துணை முழுமையாக தயாரான பின்பே கலவியில் ஈடுபட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்கள் விரைவாக உச்ச கட்டத்தை அடைவதில் பெண்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக் கூடியதாக அமையும். ஏனெனில் இது எதிர்பார்த்த இன்பத்தை உங்களுடைய துணையிருக்கு தராமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதே மாதிரி உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்பாக ஆண் பெண் இருவருமே தங்களுடைய துணைக்கு தெரியப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கலவியில் ஈடுபடுவதற்கு முன்பாக ஆண் பெண் இருவரும் இணைந்து முதலில் உரையாட வேண்டும். சரியான புரிதல் இருந்தால் மட்டுமே உடலுறவில் எப்போதும் இன்பம் கொள்ள முடியும்.