நான் யாரென்று உன் அம்மா, தங்கச்சியிடம் சென்று கேள்..! விஷால் விவகாரத்தில் மிஷ்கின் அடுத்தடுத்து வெளியிடும் சீக்ரெட்ஸ்!

தன் மீது விஷால் பொய்க் குற்றச்சாட்டு வைத்தது மட்டுமின்றி தாயை பற்றி அசிங்கமாக பேசியதாலேயே படத்தில் இருந்து விலகியதாக இயக்குர் மிஷ்கின் பரபரப்பாக பேசி உள்ளார்.


துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் விலகியது குறித்து விஷால் தரப்பு பதில் அளித்திருந்த நிலையில் அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் மிஷ்கின் பேட்டி அளித்துள்ளார் . நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதற்குக் காரணம் படத்திற்கான பட்ஜெட்டை தாண்டி மிஷ்கின் செலவு செய்ததை கேட்டதால் விலகிவிட்டாக விஷால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கதை எழுத மட்டும் 35 லட்சம் வரை இயக்குநர் மிஷ்கின் செலவு செய்ததாகவும், படம் எடுக்க 13 கோடி வரை செலவழித்து விட்டு பாதியில் விலகியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் மிஷன் இதற்கு பதில் அடி அளித்துள்ளார். கண்ணாமூச்சி என்ற இணைய தொடரின் விழாவில் பேசிய அவர் விஷாலின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். கதையை எழுதுவதற்கு செலவு செய்தது 7 லட்சம் ரூபாய் மட்டுமே. 7 லட்சம் மட்டுமே செலவு செய்தேன்.

இப்போது திரைக்கதை எழுத ரூ. 35 லட்சம் செலவு செய்ததாக விஷால் சொல்கிறார். கதை எழுதுவதற்கு யாராவது ரூ.35 லட்சம் செலவழிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார். இதுமட்டுமின்றி தம்பியாக நினைத்த விஷால் என் தாயை மிகவும் கேவலமான வார்த்தையால் பேசிய பிறகும் எப்படி அந்த படத்தில் வேலை செய்ய முடியும் என கேட்டுள்ளார். அதற்கான ஆதாரமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

என் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து அலைந்துதான் விஷால் என்.ஓ.சி. வாங்கி கொண்டு சென்றார். இந்த பிரச்சனையை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ, இயக்குநர்கள் சங்கத்துக்கோ சென்றிருந்தால் விஷாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.