காதல் மோகம்! வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது பெண்! கண்டுபிடித்து காவல் ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி செயல்!

வீட்டை விட்டு ஓடிப்போன  இளம்பெண்ணை மீட்டெடுத்து, வீட்டிற்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.


மேட்டுப்பாளையத்தில் திருமண வயதை அடையாத இளம்பெண்ணொருவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடைய வயது 17. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய காதலானது இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. அதன்படி திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தங்கள் குடும்ப உறவினருடன் நிகழ்ந்தது கூறி அழுதுள்ளனர். உடனடியாக அவர், அவர்களை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஆய்வாளர் பிரபாகரனிடம் பேச வைத்தார்.

நிகழ்ந்ததை முழுவதுமாக புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் துரிதமாக செயல்பட்டார். தனிக்குழு அமைத்து 5 மணிநேரத்திற்குள் இருவரையும் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தார். பின்னர் இருவரிடமும் மிகவும் கனிவான முறையில் வாழ்க்கையின் நிதர்சனத்தை புரியவைத்தார். அந்த மாணவிக்கு ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து அறிவுரைகளை வழங்கி அவரை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

இளம் ஆய்வாளரான பிரபாகரனின் இந்த செயலுக்கு மேட்டுப்பாளையம் மக்கள் பாராட்டுகளை குவித்த வண்ணமுள்ளனர்.