சிறுவன் ஓட்டி வந்த கார்! தாறுமாறாக சென்று 4 பேரை தூக்கி வீசிய கொடூரம்! தாம்பரம் அதிர்ச்சி!

சென்னையிலுள்ள தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள கேம்ப் ரோடில் அதி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதியதில் 4 பேர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் தாம்பரம் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கேம்ப் ரோடில் நேற்றிரவு அதிவேகத்தில் தாறுமாறாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. வேகம் அதிகமாக இருந்ததால் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை  இழந்துவிட்டார்.

முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது கார் மோதியுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இருப்பினும் கார் ஓட்டுநர், காரை நிறுத்தாமல் சென்றார். அருகில் இருந்த பொதுமக்கள் தூக்கி எறியப்பட்ட 4 பேரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். முதலில் நான்கு பேரையும் அடையாளம் கண்டனர். ஒரு வாகனத்தில் விக்ரம், கிளாட்சன் என்ற கல்லூரி மாணவர்களும், மற்றொன்றில் ஆறுமுகம்-சாந்தி என்ற தம்பதியினரும் சென்றுள்ளனர்.

இரண்டு இருசக்கர வாகனங்களையும் கார் மோதியது குறிப்பிடத்தக்கது. கேம்ப் ரோடில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் பார்த்தனர்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர். கார் ஓட்டி விபத்தினை மேற்கொண்டவருக்கு இன்னும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.