திரிபுராவில் விழா மேடையில் மோடி முன்னிலையில் பா.ஜ.க அமைச்சர் ஒருவர் சக பெண் அமைச்சரின் இடுப்பை தடவுவதுடன் அவரின் பின்பக்கம் சென்று அநாகரீகமாக நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி முன்னிலையில் பெண் அமைச்சரின் இடுப்பை தடவிய ஆண் அமைச்சர்! வைரல் வீடியோ!

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் புதிய ரயில் தடத்தை பிரதமர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான கல்வெட்டை மோடி திறந்து வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பிரதமருக்கு எதிர்வரிசையில் திரிபுரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி தேவ் இருநதார். அமைச்சர் மனோஜ் காந்திக்கு முன்பு சமூக நலத்துறை பெண் அமைச்சரான 35 வயதே சாந்தனா சக்மா நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அமைச்சர் மனோஜ், பெண் அமைச்சர் சாந்தனாவின் இடுப்பில் கையை வைத்து தடவ ஆரம்பித்தார். மேலும் மிகவும் நெருக்கமாக சென்று சாந்தனாவின் அங்கங்களை வருட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தனா அமைச்சர் மனோஜின் கையை தட்டிவிட்டார். ஆனால் அதனை பொருட்படுத்தால் மீண்டும் சாந்தனாவின் இடுப்பில் கையை வைத்து அமைச்சர் மனோஜ் தடவ ஆரம்பித்தார்.
அப்போது அமைச்சர் சாந்தனா தனது இடுப்பில் இருந்த அமைச்சர் மனோஜின் கைகளை சற்று வேகமாக தட்டிவிட்டார். இதனால் கைகளை எடுத்த அமைச்சர் மனோஜ், அமைச்சரின் பின்பகுதிக்கு சென்று மிகவும் நெருக்கமாக நின்று மோசமான செய்கையில் ஈடுபட்டார்.
இந்த செயல்கள் அனைத்துமே பிரதமர் மோடிக்கு முன்னிலையிலேயே நடைபெற்றது. ஆனால் மோடி இதனை கவனிக்கவில்லை. பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் இருந்த மேடையில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சருடன் சல்லாபம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெண் அமைச்சரும் தனக்கு நேர்ந்தது குறித்து புகார் அளிக்கவில்லை. ஆண் அமைச்சரும் வீடியோ குறித்து விளக்கம் அளிக்கவில்லை.