பிரேமலதாவுக்கு எதிராக திரளும் அமைச்சர்கள்! கூட்டணி அமைவதில் சிக்கல்!

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் என பால்வளத்துறை அமைச்சரும், 37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சரும் பிரேமலதாவுக்கு எதிராக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.


அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் அதிமுக என்ற குதிரையில் யாரும் சவாரி செய்யலாம் எனவும், அதற்காக குதிரையை தூக்கிச் செல்வேன் என கூறக்கூடாது எனவும் கூறினார்.

 37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் கூறினார்.

சிலர் பொறுமை இழந்து ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர் எனவும், எம்ஜிஆர் சொன்னதுபோல் அனைவருக்கும் பொறுமை வேண்டும் எனவும் கூறினார்.