கோவையில் கிரிக்கெட் ஃபீவர்! வேகப்பந்து வீச்சாளரான அமைச்சர்! திணறிய இளைஞர்கள்!

கோவையில் இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்டகாசமாகப் பந்துவீசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினசரி வாக்கிங் மற்றும் உடற் பயிற்சி என உடலை கட்டுமஸ்தாக வைத்து கொள்ள விரும்புவர் ,உள்ளாட்சி துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை, சென்னை என எங்கு இருந்தாலும் தினசரி காலையில் வாக்கிங் செல்வது இவரது வழக்கம்.

அதே வழக்கம் போல  கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உடல் பயிற்சி செய்து கொண்டு இருந்தார். மேலும் நடைபயிற்சியும் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு சில  பத்திரிக்கையாளர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட எஸ்.பி.வேலுமணியும் கிரிக்கெட் விளையாட களம் இறங்கினார். வேலுமணிக்கு கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால் தானாக களத்தில் இறங்கினார். பத்திரிகையாளர் ஒருவரை பேட்டி பிடிக்கச் சொன்ன வேலுமணி பந்தை வாங்கி பவுலிங் வீசினார்.

அமைச்சர் படுவேகத்தில் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல் பேட்ஸ்மேன் திணறினார். இதனால் அனைவரும் அமைச்சரை பாராட்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார் வேலுமணி. அமைச்சர் கிரிக்கெட் பந்தை வீசி அசத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.