பிராய்லர் கோழி எடையை கூட்ட தடை செய்யப்பட்ட மருந்து! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்வதற்கு தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  சென்னை நந்தனத்தில் கால்நடை பராமரிப்பு துறை பற்றிய ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அனைத்து மண்டல இயக்குனர்களும் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கால்நடை துறை சம்பந்தமான மற்றும் அதன் வளர்ச்சிக்கான பல கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் முதலாளிகள் லாபம் ஈட்டுவதற்கான கோழிகளை விரைவில் வளர்க்க வேண்டும் என்று தடைசெய்யப்பட்ட மருந்தினை அதனுடைய உடலில் செலுத்தினால் அதற்கான உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.