ஓபிஎஸ் , ஈபிஎஸ் இருவரும் அம்மாவின் வீர பிள்ளைகள்! மாஸ் காட்டும் பிரபல அமைச்சர்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அம்மாவின் வீர பிள்ளைகள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார் சாமி தரிசனம் முடித்து வந்த ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது செய்தியாளர்களில் ஒருசிலர் தமிழகத்தின் வெற்றிடம் பற்றி கூறுங்கள் என்று கேட்டனர். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அம்மாவின் வீர பிள்ளைகள். அவர்கள் இருவரும் இணைந்து தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை நிரப்பி விட்டனர்.

ஆகையால் அவர்கள் இருவரும் இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்பதே கிடையாது என்று பதிலளித்துள்ளார் . அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறாக கூறிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.