போலீஸ் காரில் ஏறி போலீசுக்கு சவால்! அமைச்சரின் பேரன் வெளியிட்ட டிக்டாக் வீடியோ! பிறகு ஏற்பட்ட தரமான சம்பவம்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சரின் பேரன் வெளியிட்ட டிக் டாக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் முஹமது அலி. இவரது பேரன் ஃபர்கான் அஹ்மத்,  சமீபத்தில் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்தபடி தனது நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அரசுக்குச் சொந்தமான உடைமையை இப்படி தவறாக பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். 

உள்துறை அமைச்சரின் பேரன் இப்படி செய்தது தவறு என்றும், இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க தவறியதோடு, உள்துறை அமைச்சர் அலட்சியமாக இருந்ததும் தவறு என்றும் சமூக ஊடகங்களில் காரசாரமான விமர்சனம் கிளம்பியுள்ளது.

குறிப்பிட்ட டிக்டாக் வீடியோவில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக தெரிகின்றன. அது உள்துறை அமைச்சரின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட வாகனமாகும்.

இதனால், உள்துறை அமைச்சர் முஹமது அலி செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.