வாணியம்பாடியில் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்! எடப்பாடியிடம் நிலோஃபரை கோர்த்துவிட்ட வீரமணி! அந்தரத்தில் அமைச்சர் பதவி!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வெறும் எட்டாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஏ.சி சன்முகம் தோற்றதற்கு உள்ளூர் அமைச்சரான வீரமணியைத்தான் எல்லோரும் கைகாட்டினார்கள்.


எல்லோரையும் அதிகாரமாக விரட்டியதைத் தவிர அவர் ஏதும் செய்யவில்லை என்பது பொதுவாக கட்சிக்குள் எல்லா மட்டத்தில் உள்ளவர்களும் சொன்னது. அதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் அப்சட்டான வீரமணி சுதாரித்து விட்டார்.ஆமாம்,அவருக்கு 'லாஜிக்' உள்ள ஒரு பலியாடு கிடைத்துவிட்டது.அது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நீலோஃபர் கபில்.

வேலூர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கிய சற்று நேரத்திலேயே டெல்லி மேலவையில் அமித்ஷா காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கப் படுவதாகவும், அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் படுவதாகவும் அறிவித்தார்.அது இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் வேலூர் பாராளுமன்ற ஓட்டுப் பதிவில் யூகித்த அதிமுகவினர் உள்ளூர் இஸ்லாமியரான டாக்ட்டர் நீலோபர் கபிலை சமூகத் தலைவர்களை சந்தித்து பேசச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால்,அமைச்சரை சந்திக்க இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் மறுத்து விட்டனர்.அது மட்டுமல்ல,வேலூர் சட்டமன்ற தொகுதிகளிலேயே திமுக வேட்பாளர் கதிருக்கு அதிக வித்தியாசத்தில் ஓட்டு விழுந்ததும் அமைச்சர் நீலோபரின் வாணியம்பாடித் தொகுதியில்தான்.கிட்டத்தட்ட 20000 ஓட்டு திமுக அதிகம்.பெற்றிருக்கிறது.

அமித்ஷா காஷ்மீரை பற்றிய அறிவிப்பை வெள்யிட்ட உடனே முதியோர்,உடல் நலம் இல்லாதோ கூட வந்து ஓட்டளித்ததுதான் ஏ.சி சண்முகம் தோல்விக்கு காரணம் என்று லாஜிக்காகச் சொல்லி தப்பித்திருக்கிறாராம் வீரமணி. எல்லாம் சர்தான்,வேலூர்ல திமுகவை ஜெயிக்க வைத்தது அமித்ஷாதான் என்று அவரிடம் எப்பாடி சொல்வார் எடப்பாடி .