தேமுதிக வந்தா ஹேப்பி! வரலனா டோன்ட் கேர்! அதிமுக அதிரடி!

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி;-


அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. சமீபகாலமாக தேர்தல் நெருங்க நெருங்க ஸ்டாலின், தினகரன் , கமலுக்கும் காய்ச்சல் வந்துவிட்டது. ஸ்டாலின் மேடைகளில் வாய்க்கு வந்த படி பேசுகிறார்.

தினகரன் தனிமரம். கமலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. அதிமுகவை பொறுத்த வரை எங்கள் கடன் பணி செய்து கிடைப்பதே ஆகும்

கமல். கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகியும் அவருக்கு  போதிய வரவேற்பு இல்லை. ஸ்டாலின் வீக் ஆக இருக்கிறார் அதனால் தான் விஜயகாந்திடம்  அரசியல் பேசியுள்ளார்.

தேமுதிக கட்சியினரிடம் விருப்ப மனு வாங்குவது அவர்கள் கட்சி நடவடிக்கை அதனால் அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை முற்று பெற்றுவிட்டது என்று கருத கூடாது,

தொடர்ந்து பேசி வருகிறோம்  அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். தேமுதிக வந்தால் ஹேப்பி, வரவில்லை என்றால் டோன்ட் கேர்.

இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.