மம்தா முன்னாடி இப்டியா பம்முறது! ஸ்டாலினை செம்மையா கலாய்த்த ஜெயக்குமார்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை செம்மையாக கலாய்த்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.


சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மீன் வளத்துறை சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் மூலம் மீன் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக 27 வாகனங்களை மானிய விலையில் மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் வழங்குகினார், பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர்:

   மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் 50% மானியத்தில் 100 பதப்படுத்தும் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான 27 வண்டிகளை வழங்கி உள்ளோம்.

சென்னையில் ராகுலை பிரதமாராக முன்மொழிந்த ஸ்டாலின் ஏன் கொல்கத்தாவில் முன் மொழியவில்லை. கொல்கத்தாவிற்கு சென்று அங்கே பம்முகிறார் ஸ்டாலின். சென்னையில் ராகுலை பிரதமாராக முன்மொழிந்த ஸ்டாலின் ஏன் கொல்கத்தாவில் முன்மொழியவில்லை. 

எங்களை ராஜினாமா செய்யுமாறு கூறும் அவர்  கோடநாடு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதால் அவருடைய கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யலாம். தேர்தலுக்கு பின் பார்க்கலாம் என கூறி இரட்டை வேடம் போடுகிறார்.

சந்தப்பர்வாதிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கோடநாடு விவகாரம் தொடர்பான சதிச்செயலுக்கு பின் திமுக தான் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.இதற்கு பின்னனியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலில் நேருக்கு நேர் சந்திக்க திராணி அற்றவர்கள் இது போன்ற ஆயுத்த்தை கையில் எடுத்து உள்ளனர், இதனை நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம். ஜாக்டோ ஜியோவினர் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இரு குழு அறிக்கை சமர்பித்துள்ளது. அதனை பரீசிலித்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளோம். 

   கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும் அதனை  சமாளித்து வருகிறோம். நிதி நிலை சீராகும் போது அவர்களின் கோரிக்கைகளை அரசி பரீசிலினை செய்யும். எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்  தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதாக கூறப்படுவதற்கு கூட சிபிஐ விசாரணை கேட்பார் போல். 

   எப்படிப்பட்ட சிண்டு முடிந்தாலும் பிரிக்கமுடியாத இயக்கமாக ஒற்றுமையுடன் மாபெரும் இயக்கமாக அதிமுக உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.