பா.ம.கவுடன் கூட்டணி! உறுதிப்படுத்திய ஜெயக்குமார்!

தி.மு.க., அ.ம.மு.கவுடன் மட்டும் கூட்டணி இல்லை பா.ம.க வந்தால் வரவேற்போம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளதன் மூலமாக அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உறுதியாகியுள்ளது.


சென்னை காமராஜர் சாலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயக்குமார் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் மற்றும் உரிமையை காக்கும் கூட்டணியாக நிச்சயம் அமையும்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் விரும்புகிறார்கள். யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிக்க உள்ளோம். மக்களவை தேர்தலை ஒரே கட்டமாகவே  நடத்துவது நல்லது.   தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தக்கூடாது.

பிற மாநிலங்களில் நிர்வாக ரீதியில் வெவ்வேறு கட்டங்களாக நடத்தப்படுவதாகவும் தமிழகத்தில் சட்டஒழுங்கு பிரச்சனை இல்லை. அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து பேசுவதாக அன்புமணி கூறியது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார்,

திமுக தீயசக்தி நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று. திமுக, அமமுக மட்டுமே எங்களின்  எதிரி. மற்றவர்கள் யார் வந்தாலும் கூட்டணி வைப்போம் . ஓ.பி எஸ். மகன் எம்.பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஜெயக்கமார், போட்டியிட விண்ணப்பம் வாங்கியதில் எந்த தவறும் இல்லை என்றும் இதுக் குறித்து வேறு எதுவும் பேச விரும்பவில்லை. என்றும் தெரிவித்தார்.  

பா.ம.கவை கூட்டணிக்கு வரவேற்பதாக ஜெயக்குமார் கூறியிருந்தாலும் ஏற்கவே எடுக்கப்பட்ட முடிவின் படி பா.ம.கவுடன் கூட்டணி உறுதி என்பதைத்தான் ஜெயக்குமார் இப்படி சூசகமாக சொல்லியுள்ளதாக கூறுகிறார்கள்.