14 வயது மகன் ஓட்டிய டூ வீலர்! கண் இமைக்கும் நேரத்தில் தாய்க்கு நேர்ந்த கோரம்! மதுரை சம்பவம்!

இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த மினி பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் மதுராகல்லூரி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே ஜெய்ஹிந்த்புரத்தில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளார்.  இன்று காலை 14 வயதான லோகேஷுடன் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

லோகேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். மதுராகல்லூரிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த மினி பஸ்  லோகேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தை நெருங்கியுள்ளது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் லோகேஷ் தடுமாறியுள்ளார். இந்த சமயத்தில் மினி பேருந்து பைக்கில் மோதியுள்ளது.

இதனால் பைக் கீழே சரிய பின்புறம் அமர்ந்திருந்த விஜயலட்சுமி கீழே விழுந்தார்.அவர் மீது மினி பேருந்து ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி உயிரிழந்தார்.  

சின்ன காயங்களுடன் லோகேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பொதுமக்கள் அந்த மினி பஸ்சை மறித்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் ஓட்டுநர் பறந்து சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்தி சென்ற ஓட்டுநரை மதுரா கல்லூரி காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் விஜயலட்சுமி ஹெல்மெட் அணியாமல் சென்றதால் பலத்த காயம் ஏற்பட்டுதுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 14 வயதே ஆன லோகேஷை இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்ததும் பெரிய தவறு என்று கூறப்படுகிறது.