கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் எடை குறைந்து பழைய நிலையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் தேவைக்கு அதிகமாக எடை அதிகரித்த பெண்களால் முழுமையாக மீள முடிவதில்லை. பிரசவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்தும் எடை குறையாத பெண்களுக்கு வரும் பாதிப்புகளை பார்க்கலாம்.


• பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருப்பதற்கும் பெண்ணிற்கு ஏற்படும் மன சோர்வுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

• பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வார காலம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் தொற்றுநோய் போன்ற பிரச்னைகள் உடல் பருமன் பெண்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

• பிரசவத்திற்கு பிறகு பெண்ணால் போதிய அளவு தூங்கமுடியாமல் போகும் நிலையினால் எரிச்சல், சோர்வு, கோபத்திற்கு பெண்கள் ஆளாகிறார்கள்.

• குடும்பத்தினர் அனைவரும் தாயைவிட குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் பெண்ணின் உடல் பருமனை கிண்டல் செய்வதும் மிகுந்த அழுத்தம் கொடுக்கிறது.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றாலும் உடல் எடை குறையாத பெண்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மருத்துவர் ஆலோசனையும் தேவையெனில் சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தாயும் சேயும் நலமாக இருக்கமுடியும்.