நாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி..! காரணம் பசுக்கள்! பதற வைக்கும் ரிப்போர்ட்

நாம் தினந்தோறும் அருந்தும் பாலில் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய வேதிப் பொருள்கள் கலந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாட்டில் தினந்தோறும் எல்லா தரப்பட்ட மக்களாலும் அத்தியாவசியமாக பயன்படுத்தக்கூடிய பொருள் பால். தமிழகத்தில் மட்டும் நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து சுமார் 34 லட்சம் லிட்டர் பால் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது.

மீதமிருக்கும் பால் அனைத்தும் தனியார் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா தரப்பட்ட மக்களாலும் உபயோகப்படுத்தப்படும் பால் மீது ஆய்வு நடத்துவதற்காக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் முடிவெடுத்தது. அதனடிப்படையில் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலும் இந்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்தது. 

அந்த வகையில் இந்த ஆய்வு தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில் 114 நகரங்களிலிருந்து 551 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பல திடுக்கிடும் தகவல்களை தந்தது. அதாவது அப்லாடாக்ஸின் எம்1 அளவு 88 மாதிரிகளில் அதிகமாக காணப்பட்டது ஆய்வு முடிவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

அப்லாடாக்ஸின் எம்1 என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான வேதிப் பொருளாகும். இதனை அன்றாடம் நாம் பாலின் மூலம் உட்கொள்வதால் கட்டாயம் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அந்த ஆய்வின் முடிவுகள் தகவல்களை வெளியிட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு இதனைக் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் பணியில் குழு ஒன்றை அமைத்தது . இந்தக் குழுவில் சுகாதாரத்துறை ,கால்நடைத்துறை , ஆவின், பல்கலைக்கழக துறை நிபுணர் என பலதரப்பட்ட அதிகாரிகளை கொண்டு நியமிக்கப்பட்ட தாகும். இந்த குழுவின் முக்கியமான நோக்கமே மனிதர்கள் குடிக்கும் இந்த பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றதா என்பதை ஆராய்வது ஆகும்.

அதனடிப்படையில் உயர்நிலை அமைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து பால் மாதிரிகள் மற்றும் மாட்டுக்கு தீவனமாக அளிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்தது சோதனை செய்தனர். அந்த சோதனையின் முடிவில் மாடு உண்ணும் தீவனத்தில் பூஞ்சைகள் அல்லது வேறு ஏதாவது கிருமிகள் இருந்தால் அது மாட்டின் கல்லீரலில் அப்லாடாக்ஸின் பி1 ஆக சேமிக்கப்படும் .

பின்னர் அது பாலாக வெளிவரும்போது அப்லாடாக்ஸின் எம்1 ஆக மாறிவிடுகிறது . இதன் மூலம் நாம் குடிக்கும் பாலில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அப்லாடாக்ஸின் எம்1 என்ற வேதிப்பொருள் கலந்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட இது அதிகமாக மாறும் பொழுது அது மனிதர்களுக்கு தீங்காக அமைகிறது என அந்த குழு ஆய்வு கூறுகிறது. இதனால் அதிகமாக பால் அருந்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ‌.